சென்னை
பாஜக செயலர்களில் ஒருவரான நந்தகுமார் ஆளுநருக்கு எழுதிய கடித்ததுக்கு பாஜக தலைவர் குழப்பமான விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு மசோதா விவகாரம் தற்போது தீவிரமாகி உள்ளது.
இந்த மசோதாவுக்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை.
அனைத்துக் கட்சிகளும் இதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என ஆளுநருக்கு கோரிக்கை விடுத்துள்ளன.
இந்நிலையில் பாஜக மாநில செயலரான நந்தகுமார் ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.
இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து பாஜக தலைவர் முருகன் பாஜக செயலரின் கடிதத்துக்கும் பாஜகவுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என அறிவித்துள்ளார்.
மேலும் அவர் தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில் இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாகவும் முருகன் தெரிவித்துள்ளார்.
கட்சியின் மாநில செயலராக நியமிக்கப்பட்டவர் எவ்வாறு கட்சிக்கு எதிராக கோரிக்கை விடுப்பார் என மக்கள் கேள்விகள் எழுப்பி உள்ளனர்.
ஒரு கட்சியின் மாநில செயலருக்கும் கட்சிக்கும் தொடர்பு இல்லை என்னும் முருகனின் அறிக்கையால் மக்கள் மத்தியில் குழப்பம் எழுந்துள்ளது.