டில்லி
இந்திய ஜனநாயகம் வெற்றிடமாகி உள்ளதாகக் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கவலை தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி இந்திய ஜனநாயகம் குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையின் முதல் பகுதி இன்று வெளியிடுகிறோம்.
விரைவில் அடுத்த பகுதி பிரசுரிக்கப்படும்.
சோனியா காந்தி, ““உலகின் மிகப் பெரிய ஜனநாயகம் இப்போது நடுச்சாலையில் உள்ளது பொருளாதார நிலை சீர்கெட்டு இருப்பது தெளிவாகத் தெரிகிறது. ஜனநாயக முறையின் அனைத்து தூண்களும் தாக்கப்பட்டுள்ளது என்பது வருத்தத்துக்கு உரியதாகும். அழுத்தத்தினாலும் மிரட்டலாலும் கருத்துச் சுதந்திரம் தடைப்பட்டுள்ளது. எதிர்ப்பு என்பது பயங்கரவாதம் அல்லது தேசவிரோத நடவடிக்கை என முத்திரை குத்தப்படுகிறது. இதைப்போல் குடிமக்களின் உரிமைகளை எடுத்துரைக்கும் பல அமைப்புக்கள் தாக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் பல பிரச்சினைகள் தேச பாதுகாப்பு என்னும் போலி அச்சுறுத்தலால் திசை திருப்பப்படுகின்றன. இதில் சில அச்சுறுத்தல்கள் மட்டுமே உண்மையானவை ஆகும். ஆனால் மோடியின் பாஜக அரசு அனைத்து அரசியல் எதிர்ப்பையும் எதற்காக எதிர்ப்பு என்பதைக் கவனத்தில் கொள்ளாமல் அதை அச்சுறுத்தலாகக் கூறி விடுகிறது. இத்தகைய நடவடிக்கைகளால் பல ஊடகங்களின் புலனாய்வு பணிகள் வெளியில் தெரிவதில்லை. இந்தியாவின் கடின உழைப்பினால் கிடைத்த ஜனநாயகம் தற்போது வெற்றிடமாகி உள்ளது.
எந்த ஒரு மிகைப்படுத்தலுக்கும் மோடி அரசு இடம் தருவதில்லை. உண்மையில் அரசியல் எதிர்ப்பு அனைத்து,ம் ஆளும் கட்சியின் கீழ் உள்ள காவல்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ, என் ஐ ஏ, மற்றும் போதை மருந்து ஒழிப்புத்துறையால் நசுக்கப்படுகின்றன. தற்போது இந்த துறைகள் அனைத்தும் பிரதமரின் அல்லது உள்துறை அமைச்சரின் ஆணைப்படி மட்டும் செயல்படுகின்றன. நாட்டின் அதிகாரம் என்பது அரசியலமைப்பு சட்டத்துக்கு கீழ்ப்படிந்தும் ஜனநாயக உரிமைகளை மதித்தும் இயங்க வேண்டும்.
இவற்றில் முக்கியமான இரண்டு விதிகள் என்னவென்றால் இந்த அதிகாரம் மக்களுக்கு ஆதரவாக எவ்வித வேறுபாடும் இன்றி இயங்க வேண்டும் மற்றும் அரசியல் எதிரிகளை அழிக்க அதிகாரத்தைப் பயன்படுத்தக் கூடாது என்பதாகும். முன்பு ஆட்சி செய்த அத்தனை அரசுகளுக்கும் மாறாக இந்த கொள்கைகளை மறந்து மோடி அரசு செயல்பட்டு வருகிறது.” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கையின் இரண்டாம் பகுதி விரைவில்……