டெல்லி: திருமாவளவன் மீதான வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதற்கு, முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இணையம் வழி கருத்தரங்கு ஒன்றில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் திருமாவளவன் பங்கேற்று மனுதர்மம் குறித்து பேசினார். அவரது பேச்சு சர்ச்சையானது. இதையடுத்து, பெண்கள் குறித்து அவதூறாக பேசியதாக அவர் மீது 6 பிரிவுகளின்கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.
திருமாவளவன் மீதான வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதற்கு, முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தமது டுவிட்டரில் கூறி இருப்பதாவது:

தந்தை பெரியார் பற்றிய கருத்தரங்கில் நண்பர் திரு.திருமாவளவன் ஆற்றிய உரை (குற்றவியல்) குற்றம் என்று காவல் துறை வழக்கு பதிவு செய்திருக்கிறது. பேசிய பொருள் ஏற்படையதா இல்லையா என்பது பற்றி இரண்டு கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் அது எப்படி (குற்றவியல்) குற்றம் ஆகும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மற்றொரு பதிவில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது: பேச்சுக்கு சுதந்திரம் உண்டு என்பதை நாள் தோறும் நினைவு படுத்த வேண்டுமா? இது போன்ற கருத்துக்களைத் தந்தை பெரியார் பேசினார். இன்று அவர் பேசியிருந்தால் காவல் துறை என்ன செய்திருப்பார்கள்? என்று விமர்சித்து உள்ளார்.
Patrikai.com official YouTube Channel