டெல்லி: மே 25ம் தேதி முதல் உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்தவர்கள் எண்ணிக்கை 1.39 கோடியாக உயர்ந்துள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளுக்கு பின் மே 25 முதல் இந்தியாவில் உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்தவர்கள் பற்றிய தகவலை அவர் வெளியிட்டார். தொடர்ந்து அவர் கூறியதாவது:
அக்டோபர் 18ம் தேதி புதிய உட்சமாக, 1,581 உள்நாட்டு விமானங்களில் 1,80,838 பேர் பயணித்துள்னர். அதன்மூலம் உள்நாட்டு விமான நிலையத்திற்கு வந்தவர்களின் எண்ணிக்கை 3,63,757 ஆக இருந்தது.
கடந்த மே 25 முதல் உள்நாட்டு விமானங்களில் 1.39 கோடி பேர் பயணம் செய்துள்ளனர். வந்தே பாரத் திட்டத்தின் மூலம் இதுவரை 22 லட்சம் மக்கள் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கும், இங்கிருந்து சொந்த நாடுகளுக்கும் சென்றுள்ளனர்.
உள்நாட்டு விமான சேவையில், தற்போது நாளொன்றுக்கு 2 லட்சம் பேர் பயணிக்கின்றனர். இம்மாத இறுதியில் பண்டிகை காலத்தை முன்னிட்டு, 3 லட்சமாக உயரும் என்று தெரிவித்தார்.