‘இது வேதாளம் சொல்லும் கதை’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனவர் ரதீந்திரன் ஆர்.பிரசாத். இந்த படம் வெளியாகும் முன்பே தனது அடுத்த படத்துக்குத் தயாரானார் ரதீந்திரன்.
ஐஸ்வர்யா ராஜேஷ் பிரதான நாயகியாக நடிக்கும் ‘பூமிகா’ படத்தை ரதீந்திரன் இயக்கினார். ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகும் 25-வது படமாக ‘பூமிகா’ உருவாகியுள்ளது.
ஒளிப்பதிவாளராக ராபர்ட், இசையமைப்பாளராக ப்ரித்வி சந்திரசேகர், எடிட்டராக ஆனந்த் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.


த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஜெயம் ரவி வெளியிட்டுள்ளார்.

[youtube-feed feed=1]