சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6.87 லட்சத்து 400 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில், தொற்று பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 1,89,995 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இதுவரை 61ஆயிரம் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளதாகவும் சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது.
சென்னையில் நேற்று ஒரே நாளில் மட்டும் 1,036 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், மொத்த பாதிப்பு 1,89,995 ஆக உயர்ந்துள்ளது. அதுபோல, நேற்று மட்டும்  1359 பேர் தொற்றில் இருந்து  குணம் அடைந்து உள்ளனர். இதனால், இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை  1,73,892 ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலையில், 12,583 பேர் சிகிச்சை பெற்று வருகின்றன.
நேற்று மட்டும் சென்னையில் 17 பேர் உயிர் இழந்துள்ளதால், இதுவரை பலியானோர் எண்ணிக்கை  3,520 ஆக உயர்ந்துள்ளது.  தற்போது சென்னையில் 12,583 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் புதிதாக 88 ஆயிரத்து 643 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் 3,914 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 56 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்திருக்கிறார்கள். மொத்தமாக 10 ஆயிரத்து 642 பேர் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியாகியிருக்கிறார்கள்.
சென்னையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இதுவரை சென்னை மாநகராட்சியில் 61 ஆயிரத்து 235 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. இந்த காய்ச்சல் முகாமில் 30 லட்சத்து 83 ஆயிரத்து 190 பேர் கலந்து கொண்டுள்ளனர். இதில் 1 லட்சத்து 77 ஆயிரத்து 609 பேருக்கு சளி, காய்ச்சல் அறிகுறி இருந்தது. இவர்களை பரிசோதித்ததில் 1 லட்சத்து 71 ஆயிரத்து 691 பேருக்கு கொரோனா அறிகுறி காணப்பட்டதால், அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனை முடிவில் இதுவரை 27 ஆயிரத்து 351 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 10-ந் தேதி முதல் மாலை நேர காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.  அந்த வகையில் இதுவரை 9 ஆயிரத்து 508 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை  பாதிப்பு மண்டலம் வாரியாக விவரம்:
1    திருவொற்றியூர்     367
2     மணலி  177
3     மாதவரம்     433
4     தண்டையார்பேட்டை  670
5     ராயபுரம்    708
6     திருவிக நகர்     964
7     அம்பத்தூர்   825
8     அண்ணா நகர்    1099
9     தேனாம்பேட்டை     974
10     கோடம்பாக்கம்   1099
11     வளசரவாக்கம்   743
12     ஆலந்தூர்    635
13     அடையாறு    926
14     பெருங்குடி   470
15     சோழிங்கநல்லூர்    265
16     இதர மாவட்டம்     213