டெல்லி: நவம்பர் முதலான குளிர்காலத்தில் இந்தியாவில் கொரோனாவில் 2வது தாக்குதல் அபாயம் உள்ளதாகவும், கொரோனா குறைந்துவிட்டதாக அலட்சியம் வேண்டாம் என்று மத்தியஅரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அடுத்த மாதம் (நவம்பர்) முதல் 3 மாதங்களுக்கு தொற்றின் வீரியம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு சற்று குறையத்தொடங்கி உள்ளது. நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.14 லட்சத்தை தாண்டியது. அதே போல், பாதிப்பு 75.50 லட்சத்தை தாண்டி உள்ளது. தற்போது தொற்று பரவல் ஓரளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. இருந்தாலும், உலகின் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், தற்போது இந்தியா பாதுகாப்பாகவே உள்ளது.
இருந்தாலும், இந்தியா அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருப்பதால் 90 சதவிகித மக்களுக்கு எளிதில் நோய்த் தொற்று அபாயம் ஏற்படக் கூடிய சிக்கல் இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
தற்போதைய தொற்று பரவல் குறைவை வைத்து கொரோனா தொற்று காலம் முடிந்து விட்டது என்று அலட்சியமாக இருந்து விடாமல் மேலும் சில மாதங்கள் முக்கவசம், தனிமனித இடைவெளியை கடைபுடிக்க வேண்டியது அவசியம் என்றும், பல ஐரோப்பிய நாடுகளில் குளிர்காலத்தில்தான் கொரோனா பரவலின் வேகம் உச்சத்தைத் தொட்டது. அதுபோல நமது நாட்டிலும் குளிர்காலங்களான நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் 2வது கட்ட தொற்று பரவலுக்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனால், மக்கள் இன்னும் கவனமாக இருக்க வேண்டும், கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று எச்சரித்து இருப்பதுடன், கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகையின்போது, பொதுமக்கள் சமூக இடைவெளி, முக்கவசம் போன்ற எந்வொரு விழிவுப்புணர்களை கண்டுகொள்ளாததால், தற்போது அங்கு தொற்று பரவல் அதிகரித்து வருகிறது என்பதை சுட்டிக்காட்டி இருப்பதுடன், இந்தியாவில் கொரோனா வைரசின் வீரியம், செயல்படும் தன்மை பற்றி நிபுணர்கள் ஆராய்ந்து வருகிறார்கள்,. இதுவரை எந்தவொரு இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை.
எனவே, பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இந்த குளிர்காலத்தைக் கடக்க வேண்டிய சூழல் மட்டுமின்றி சவாலும் உருவாகி உள்ளது. அதை எதிர்கொள்ள மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்று மத்தியஅமைச்சர் ஹர்ஷ்வர்தன் எச்சரித்துள்ளது.