மும்பை: மும்பையில் மோனோ ரயில்சேவை 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கியது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக, பொது போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. தொற்று பரவும் விகிதத்திற்கேற்ப மாநில அரசுகள் தளர்வுகளை அறிவித்து வருகின்றன.
அந்த வகையில் மகாராஷ்டிராவில் மோனோ ரயில் சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மும்பை பெருநகர மேம்பாட்டு ஆணையம் சார்பில் மோனோ ரயில் பாதை ஆய்வு செய்யப்பட்டது.
அக்டோபர் 15ம் தேதி மோனோ ரயில் சேவை தொடங்க மாநில அரசு அனுமதி தந்திருந்தாலும், பராமரிப்பு, செயல்பாடு காரணமாக இன்று முதல் மோனோ ரயில் சேவை தொடங்கி இருக்கிறது.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக டிக்கெட்கள் இணைய முறையில் வழங்கப்பட்டு ஸ்கேன் மூலம் அனுமதியளிக்கப்படுகிறது. மேலும் மாஸ்க் இல்லாமல் வருபவர்களை ரயிலுக்குள் அனுமதிக்காத வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.