புதுச்சேரி: புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு பேருந்துகளை இயக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

இது குறித்து புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறி இருப்பதாவது: மருத்துவப்படிப்பில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10% இடஒதுக்கீடு செய்துள்ளது வரலாற்று துரோகம். கொரோனா தொற்று குறைந்து புதுச்சேரி விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும்.
புதுச்சேரியில் இறப்பு விகிதம் குறைவு. ஆனாலும் மக்கள் மெத்தனமின்றி விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். முன்னதாக புதுச்சேரியில் இன்று புதிதாக 177 பேருக்குக் கொரோனோ உறுதி செய்யப்பட்டது. அதன் மூலம் ஒட்டு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 33 ஆயிரத்தைத் தாண்டியது.
Patrikai.com official YouTube Channel