புவனேஸ்வர்: ஒடிசாவில் 24 மணிநேரத்தில் புதிதாக 2,019 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

.நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்று நாள்தோறும்  அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ஒடிசாவில் நாள்தோறும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.
இது தொடர்பாக ஒடிசா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: புதியதாக 2,019 பேருக்கு பாதிப்பு ஏற்பட ஒட்டு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,68,364 ஆக அதிகரித்துள்ளது.
22,949 பேர் இன்னமும் சிகிச்சை பெற்று  வருகின்றனர். ஒட்டு மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 2,44,227 ஆக உயர்ந்துள்ளது. 14 பேர் பலியாக, உயிரிழ்ப்பு 1,135 ஆக உள்ளது.