சென்னை
தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 4295 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,83,486 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் 10,586 பேர் உயிர் இழந்து 6,32,708 பேர் குணம் அடைந்து தற்போது 40,192 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சென்னையில் மட்டும் இன்று 1132 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது.
இதுவரை சென்னையில் 1,88,944 பேர் பாதிக்கப்பட்டு 3,504 பேர் உயிர் இழந்து 1,72,5533 பேர் குணம் அடைந்து தற்போது 12,907 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அடுத்ததாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 40,995 பேர் பாதிக்கப்பட்டு 623 பேர் உயிர் இழந்து 38,512 பேர் குணம் அடைந்து தற்போது 1,860 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மூன்றாவதாக கோவை மாவட்டத்தில் 39,495 பேர் பாதிக்கப்பட்டு 518 பேர் உயிர் இழந்து 35,116 பேர் குணம் அடைந்து தற்போது 3,861 பேர் சிகிச்சையில் உள்ளனர்.