சென்ரனை: தி.மு.க எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியனின் மகன் அன்பழகன் கொரோனா தொற்றால் காலமானார். அவரது மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட் பதிவில் கூறியிருப்பதாவது,
அருமைச் சகோதரர் @Subramanian_ma மகன் அன்பழகன் கொரோனா தொற்றால் உயிரிழந்தது நெஞ்சை உறைய வைத்துவிட்டது. மா.சு இணையர் கண்ணின் மணி போல் காத்துவந்தார்கள். ஆறுதல் சொல்ல வார்த்தையில்லை. ஊரார்க்கு ஒன்று என்றால் ஓடி நிற்கும் மா.சு.வுக்கு இப்படியொரு சோதனையா? ஆழ்ந்த இரங்கல்கள்!
7 மாதங்களாகியும் தமிழகத்தில் இன்னும் தணியாத கொரோனா தொற்றால் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கிறார்கள். ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வரும் தி.மு.க.வினரும் கொரோனா பாதிப்பில் இருந்து தப்பவில்லை.
இந்த கொரோனா பெருந்தொற்றால் தி.மு.கவின் செயல்வீரராக திகழ்ந்து வந்த ஜெ.அன்பழகன் உயிரிழந்தார். அதன் பிறகு பலர் இந்த கொரோனா தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று குணமடைந்து மீண்டும் களப்பணியாற்றி வருகின்றனர்.
அவ்வகையில், சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியனும் கடந்த செப்டம்பர் 28ம் தேதி கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருந்தார்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.