சென்னை: கோயம்பேடு மார்க்கெட் திறக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு 50 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் பரவின. இதையடுத்து, கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த 13 நாளில்தான் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாக பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
சென்னையில் கொரோனா பாதிப்பு மீண்டும் தீவிரமடைந்துள்ளது. இதற்கு காரணம் கோயம்பேடு மார்க்கெட் என குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களில் கோயம்பேடு வணிக வளாகத்தில் 50 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்று பரவி வரும் செய்தி தவறு , கடந்த 13 நாட்களில் 3098 நபர்களுக்கு பரிசோதனை செய்ததில் 50 நபர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
கோம்பேடு சந்தை சந்தை மீண்டும் திறக்கப்பட்ட இரண்டு வாரங்களில் இதுவரை சுமார் 3,500 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. ஒவ்வொரு நாளும் சுமார் 200 பேரின் பரிசோதனைக்கு தேவையான மாதிரிகள் சேகரிக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த சந்தைக்கு வருவோரின் பரிசோதனைக்காக மட்டும் நான்கு குழுக்கள் வெவ்வேறு வாயில்கலில் கோயம்பேடு சந்தையில் முகாமிட்டுள்ளதாக அவர்கள் கூறினர்.