ஷார்ஜா: பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 82 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்துள்ளது கொல்கத்தா அணி.
முதலில் பேட்டிங் செய்த விராத் கோலியின் அணி 20 ஓவர்களில் 194 ரன்களைக் குவித்தது.
கடின இலக்க‍ை நோக்கி, பின்னர் களமிறங்கிய கொல்கத்தா அணியில், ஷப்மன் கில் மட்டுமே அதிகபட்சமாக 34 ரன்களை அடித்தார். இரண்டாவது அதிகபட்ச ரன் 16.
இதர அனைத்து பேட்ஸ்மென்களும் அடித்தது ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே. இறுதியில், 20 ஓவர்கள் வரை மூச்சைப் பிடித்திருந்த அந்த அணி 112 ரன்களை மட்டுமே எடுத்து, 82 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய தோல்வியை சந்தித்தது.
பெங்களூரு அணி சார்பில் கிறிஸ் மோரிஸ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அந்த அணியின் யஸ்வேந்திர சஹல் 4 ஓவர்களை வீசி, வெறும் 12 ரன்களை மட்டுமே கொடுத்ததே இன்றைய சிறந்த பந்துவீச்சாகும்.