டில்லி
ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 69,77,008 ஆக உயர்ந்து 1,07,450 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 73,220 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 69.77,008 ஆகி உள்ளது.  நேற்று 929 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,07,450 ஆகி உள்ளது.  நேற்று 82,292 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 59,85,505 ஆகி உள்ளது.  தற்போது 8,82,997 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் நேற்று 12,134 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 15,06,018 ஆகி உள்ளது  நேற்று 302 பேர் உயிர் இழந்து மொத்தம் 39,732 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 17,323 பேர் குணமடைந்து மொத்தம் 12,29,339  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் நேற்று 5,145 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,44,864 ஆகி உள்ளது  இதில் நேற்று 31 பேர் உயிர் இழந்து மொத்தம் 6,159 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 6,1110 பேர் குணமடைந்து மொத்தம் 6,91,040 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 10,913 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 6,90,269 ஆகி உள்ளது  இதில் நேற்று 114 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 9,789 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 9,091 பேர் குணமடைந்து மொத்தம் 5,61,610 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 5,185 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 6,46,128 ஆகி உள்ளது  இதில் நேற்று 68 பேர் உயிர் இழந்து மொத்தம் 10,120 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,357 பேர் குணமடைந்து மொத்தம் 5,91,811 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று 3,207 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 4,30,666 ஆகி உள்ளது  இதில் நேற்று 48 பேர் உயிர் இழந்து மொத்தம் 6,293 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,098 பேர் குணமடைந்து மொத்தம் 3,83,086 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.