டில்லி
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 69,03,812 ஆக உயர்ந்து 1,06,521 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
நேற்று இந்தியாவில் 70,824 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 69.03,812 ஆகி உள்ளது. நேற்று 967 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,06,521 ஆகி உள்ளது. நேற்று 78,746 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 59,03,207 ஆகி உள்ளது. தற்போது 8,93,041 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் நேற்று 13,395 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 14,93,884 ஆகி உள்ளது நேற்று 358 பேர் உயிர் இழந்து மொத்தம் 39,430 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 15,575 பேர் குணமடைந்து மொத்தம் 12,12,016 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் நேற்று 5,292 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,39,719 ஆகி உள்ளது இதில் நேற்று 42 பேர் உயிர் இழந்து மொத்தம் 6,128 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 6,102 பேர் குணமடைந்து மொத்தம் 6,84,930 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 10,704 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 6,79,356 ஆகி உள்ளது இதில் நேற்று 101 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 9,675 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 9613 பேர் குணமடைந்து மொத்தம் 5,52,519 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 5,088 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 6,40,943 ஆகி உள்ளது இதில் நேற்று 68 பேர் உயிர் இழந்து மொத்தம் 10,052 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 5,718 பேர் குணமடைந்து மொத்தம் 5,86,454 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று 3,133 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 4,27,459 ஆகி உள்ளது இதில் நேற்று 45 பேர் உயிர் இழந்து மொத்தம் 6,245 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 3,690 பேர் குணமடைந்து மொத்தம் 3,78,662 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.