சென்னை
தற்போதைய சூழலில் தமிழகத்தில் பள்ளிகளைத் திறப்பது சாத்தியம் இல்லை எனப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறி உள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதுவரை தமிழகத்தில் 6,59,453 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதில் 10,052 பேர் உயிர் இழந்துள்ளனர்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் இன்று சென்னை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஒரு நிகழ்வில் கலந்து கொண்டார்.
பல்லாவரம் வேல்ஸ் பல்கலைககழக் வளாகத்தில் நடந்த நிகழ்வின் முடிவில் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்
அப்போது அவர்,
“ஆந்திராவில் பள்ளிகள் திறந்த சில நாட்களில் 29 மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
அதே நிலை தமிழகத்திலும் ஏற்படலாம்.
எனவே மாணவர்களின் உயிர் முக்கியம் என்னும் அடிப்படையில் தற்போதைய சூழலில் பள்ளிகளைத் திறப்பதற்குச் சாத்தியம் இல்லை”
எனத் தெரிவித்துள்ளார்.