இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாறு ‘800’ என்ற பெயரில் படமாகிறது. முத்தையா முரளிதரன் 800 விக்கெட்களை வீழ்த்தியவர் என்பதால், அவருடைய வாழ்க்கை வரலாற்றுப் படத்துக்கு அதே பெயராய் வைத்துள்ளனர் .
‘கனிமொழி’ படத்தை இயக்கிய எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார்.
இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக சாம் சி.எஸ் பணிபுரியவுள்ளார்.
இதில் எப்படி விஜய் சேதுபதி நடிக்கலாம் என்று பலர் கேள்விகள் எழுப்பினர். ஆனால், முத்தையா முரளிதரனாக நடித்தே தீருவது என்று விஜய் சேதுபதி உறுதியாக உள்ளார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று (அக்டோபர் 8) வெளியிடப்பட்டது.
It’s official! Stay tuned for an exciting update coming your way very soon! 🙌⚡️@VijaySethuOffl #MuthiahMuralidaran #MuralidaranBiopic #MSSripathy #Vivekrangachari @proyuvraaj pic.twitter.com/cyfcMAR4Ha
— Movie Train Motion Pictures (@MovieTrainMP) October 8, 2020
விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் ஆகியவற்றை வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளது.