சண்டிகர்: நான் தமிழக மக்களுக்கு கடமைப்பட்டிருக்கிறேன்…என ராகுல் உருக்கமாக பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.
உபி மாநிலத்தில் தலித் இளம்பெண் 4 பேர் கொண்ட உயர்ஜாதி கும்பலால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, உயிரிழந்த விவகாரம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறச்சென்ற ராகுல், பிரியங்காவிடம் உ.பி. மாநில காவல்துறை அத்துமீறி நடந்துகொண்ட விதமும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியினர் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் கொதித்தெழுந்து போராட்டத்தில் குதித்தனர். மேலும், உ.பி. வன்கொடுமைக்கு நியாயம் வேண்டும் என்று வலியுறுத்தியும் தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்றது.
இந்த நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது பேசிய ராகுல்காந்தி, தமிழக மக்கள் குறித்து சிலாகித்து பேசினார். அப்போது, நான் தமிழக மக்களுக்கு கடன்பட்டிருக்கிறேன். ஏன் என்று தெரியவில்லை. ஆனால், அது எனது மனதில் இருந்துகொண்டே இருக்கிறது என்று உருக்கமுடன் கூறினார். அவரது பேட்டி வீடியோ வைரலாகி வருகிறது.
தொடர்ந்து பேசியவர், என்னைத்தள்ளியது உண்மையான தள்ளல் அல்ல, உண்மையான தள்ளல் எதுவென்றால் ஹத்ராஸில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை செய்கின்றனரே அதுதான் உண்மையான கற்பனை செய்ய முடியாதது. அதனால் தான் அந்தக் குடும்பத்தினரைச் சந்திக்கச் சென்றேன்.
‘ஒட்டுமொத்த நாடுமே, மக்களுமே அடித்து வீசப்படுகின்றனர், கீழே தள்ளப்படுகின்றனர். பொதுமக்களையும், விவசாயிகளையும் காப்பது நம் கடமை. இது அந்தமாதிரியான அரசு, நாம் எழுந்து நின்று போராடினால் கீழே தள்ளப்படுவோம், அதுதான் இந்த அரசு. நம்மை தடிகொண்டு அடிப்பார்கள். எதற்கும் தயார்தான்.
அவர்கள் இந்தப் போராட்டத்தில் தனித்து விடப்படவில்லை என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்தவே விரும்பினேன்.
‘இந்திய நிலத்தை யாரும் ஆக்கிரமிக்கவில்லை என்றார் மோடி, ஆனால் எல்லையில் சீனா 1,200 சதுர கிமீ பரப்பளவை ஆக்கிரமித்தனர். சீனா இதை எப்படி செய்ய முடிகிறது எனில், அவர்களுக்குத் தெரியும் மோடி தன் இமேஜைக் காப்பாற்றிக் கொள்ளவே முயற்சி செய்வார் என்பது அவர்கள் அறிந்ததே.
இவரது இமேஜைக் காத்துக் கொள்ள 1,200 சதுரகிமீ பரப்பளவை தாரை வார்த்தார். நாட்டுக்கே இது தெரியும் ராணுவ வீரர், ஜெனரல்களுக்கும் இது தெரியும்.
அதே போல் விவசாயச்சட்டங்கள் பற்றி மோடிக்கே தெரியவில்லை என்று நினைக்கிறேன்’. வேளாண் சட்டங்கள் விவசாயிகள் மீதான தாக்குதலாகும். விவசாயிகளுக்கு எதிராக கருப்பு சட்டங்களை மோடி அரசு இயற்றியுள்ளது.
கொரோனா குறித்து நான் பிப்ரவரி மாதம் எச்சரித்தேன். அப்போது நான் ஜோக் அடிப்பதாக கூறினார். கொரோனா ஊரடங்கின்போது, சிறு தொழில்களை மோடி அரசாங்கம் நசுக்கிவிட்டது. இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பே சிறு குறு தொழில்கள்தான்.
ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருடன் நாங்கள் உள்ளோம்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு உத்தரபிரதேச நெருக்கடி கொடுக்கிறது. ஆனால்,
ஹத்ராஸ் சம்பவம் குறித்து பிரதமர் மோடி இதுவரை ஒரு வார்த்தை கூட பேசவில்லை” .
இவ்வாறு சரமாரியாக மத்திய அரசு மீது குற்றம் சாட்டினார்.