துபாய்
ஐபிஎல் 2020 போட்டிகளில் இருந்து இரு வீரர்கள் விலகி உள்ளனர்.
ஐபிஎல் 2020 போட்டிகள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாகத் தள்ளி வைக்கப்பட்டது.
தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த போட்டிகள் நடந்து வருகின்றன.
இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் வீரர் புவனேஷ்வர் குமாருக்கு இடுப்பில் அடிபட்டுள்ளது.
அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் விளையாடும் போதும் இந்த காயம் ஏற்பட்டது.
இதையொட்டி அவர் இனி வரும் போட்டிகளில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டில்லி அணியைச் சேர்ந்த அமித் மிஸ்ராவுக்கு விரலில் அடிபட்டுள்ளது.
எனவே அமித் மிஸ்ரா மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் விளையாட மாட்டார் என அணியின் அதிகாரி தெரிவித்துள்ளார்.