புவனேஸ்வர்: ஒடிசாவில் வங்கி ஊழியர்கள் 3,066 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. ஆனாலும் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டே வருகிறது.
ஒடிசாவிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அம் மாநிலத்தில் 30,301 பேர் கொரோனா காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 1,98,194 பேர் குணமடைந்துள்ளனர். 892 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந் நிலையில், ஒடிசா மாநிலத்தில் வங்கி ஊழியர்கள் 3,066 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தொற்று உறுதியானவர்களில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
எஸ்பிஐ வங்கியில் இதுவரை அதிகபட்சமாக 968 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஆக்சிஸ் வங்கியில் 390 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.