சென்னை: தமிழ்நாட்டின் அதிமுக அரசு, சென்னையின் இரண்டாவது விமான நிலைய உருவாக்கத்திற்கான ஏலப் பணிகளை இன்னும் தொடங்காத காரணத்தால், தமிழ்நாட்டு தலைநகரில் இரண்டாவது விமான நிலையம் என்ற கனவு நனவாக இன்னும் நீண்ட நாட்கள் ஆகுமென்ற நிலை ஏற்பட்டுள்ளது.
சென்ன‍ைக்கு அருகே உள்ள பரந்தூரில், புதிய விமான நிலையம் கட்டுவதற்காக 4500 ஏக்கர் நிலம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப-பொருளாதார சாத்தியக்கூறு அறிக்கையை தயார்செய்வதற்கான ஆலோசகரையே தமிழ்நாடு அரசு இன்னும் தேர்வுசெய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறிக்கையில், சர்வே, மாஸ்டர்பிளான், நிதி மாதிரி, கட்டாய அனுமதிகள், ஏல மேலாண்மை உள்ளிட்ட பல விஷயங்கள் உள்ளடங்கியிருக்கும்.
தற்போது புதிய விமான நிலையத்திற்காக பரந்தூரில் தேர்வு செய்யப்பட்டிருக்கும் இடமானது, தற்போதைய விமான நிலையத்திலிருந்து 60 கி.மீ. தொலைவில் அ‍மைந்துள்ளது. கும்மிடிப்பூண்டி, மாமண்டூர் மற்றும் செய்யூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வுசெய்த பிறகே, தற்போதைய இடம் தேர்வு செய்யப்பட்டது.