
துபாய்: சென்னை அணிக்கு எதிரான போட்டியில், 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களை எடுத்துள்ளது ஐதராபாத் அணி.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் தேர்வுசெய்த ஐதராபாத் அணியில், துவக்க வீரரும் கேப்டனுமான டேவிட் வார்னர் 28 ரன்களுக்கு அவுட்டாக, மற்றொரு துவக்க வீரர் பேர்ஸ்டே டக் அவுட் ஆனார்.
பிரியம் கார்க் 26 பந்துகளில் 51 ரன்களை அடித்து அணியின் ஸ்கோர் உயர உதவினார். மணிஷ் பாண்டே 29 ரன்களும், அபிஷேக் ஷர்மா 31 ரன்களும் அடித்தனர்.
இறுதியில், 164 ரன்களை சேர்த்தது ராஜஸ்தான் அணி. சென்னை தரப்பில், சாம் குர்ரன் 3 ஓவர்களில் 37 ரன்களை கொடுத்ததே அதிகபட்சம். மற்றபடி, இதர பந்துவீச்சாளர்கள் சுருக்கமாகவே ரன்களை வழங்கினர். தீபக் சஹார் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
Patrikai.com official YouTube Channel