அமராவதி: ஆந்திராவில் மேலும் 6,555 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அம்மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 6,555 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனா பாதிப்பு 7,06,790 ஆக அதிகரித்துள்ளது.
ஒரேநாளில் 31 பேர் உயிரிழக்க, பலியானவர்களின் எண்ணிக்கை 5,900 ஆக உயர்ந்துள்ளது. ஆந்திரா முழுவதும் இன்று மட்டும், 7,485பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதன் மூலம், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,43,993 ஆக அதிகரித்து உள்ளது. தற்போது வரை 56,897 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.