சிலிகுரி: மமதா பானர்ஜியை தழுவிக் கொள்வேன் என்று பேசி சர்ச்சையை ஏற்படுத்திய பாஜக தலைவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
மேற்கு வங்கத்தில், திரிணமுல் காங்கிரஸ் முன்னாள் எம்பியும், பாஜக தேசிய செயலாளரான அனுபம் ஹஸ்ரா, நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது, கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் வலியை, மாநில முதல்வர் மம்தா உணரவில்லை என்றார்.
மேலும் தமக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால், மமதாவை தழுவிக் கொள்வேன், அப்போது தான், கொரோனாவின் தீவிரத்தை உணர்வார் என்று பேசினார். அவரது பேச்சு சர்ச்சையானது. இந் நிலையில் அனுபம் ஹஸ்ரா, தமக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை உறுதிப்படுத்தி உள்ளார்.
இதனை தமது முகநூல் பக்கத்தில் கூறி உள்ள அவர், சில நாட்களாக எனக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதாகவும், பரிசோதனை செய்ததில் கொரோனா அறிகுறி இருந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறி உள்ளார்.