திருவனந்தபுரம்: கேரளாவில் 5 பேருக்கு மேல் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது.

கேரளத்தில் நாளுக்குநாள் அதிகரித்து கொரோனா பாதிப்பு வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருகிறது. இதையடுத்து, மாநில அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
அதன்படி மாநிலத்தில் 5 பேருக்கு மேல் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதம் இறுதி வரை மாநிலத்தில் திட்டமிடப்பட்டிருந்த அனைத்து சமூக, அரசியல் நிகழ்வுகளுக்கும் தடை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நிலைமைக் கருத்தில் கொண்டு 144 தடை உத்தரவைப் பயன்படுத்தி கொள்ள ஆட்சியர்களுக்கு, மாநில அரசு அறிவுறுத்தி உள்ளது.