தன்னம்பிக்கைக் கவிதை – பகுதி 5
கனவின் குழந்தைகள்
பா. தேவிமயில் குமார்
உலகம் சிறியதுதான்
உள்ளத்தைப் பெரிதாக்கும் போது !
பெயரளவிலான குறிக்கோள்கள் வேண்டாம்
பேர் சொல்லும் குறிக்கோள்களே வேண்டும் !
மண்ணுலகை வென்றவர்கள் கூட
முதலில் நம்பியது, தன்
மனதை மட்டும்தான்
தன்னைத்தானே நேசிப்பது தான்
தன்னம்பிக்கையின் முதல் படி
முயன்று கற்றல் என்பதே
மனதிற்கு நீ அளிக்கும் முதல் பயிற்சி
நம்பி வந்தவர்களை என்றும்
கைவிடாது நம்பிக்கை !
உன்னையே நீ ஆளக்கற்றுக்கொள்
அதுவே பின்னாளில்,
உலகை ஆள வழிவகுக்கும் !
முன்னேற்றம் என்பது திரைப்படத்தில் வரும்,
மூன்று மணி நேர காட்சியல்ல !
மணித்துளிகளை மதிப்பவனே,
மற்றவர்கள் மதிக்கும்
மனிதனாக வருவான் !
எண்ணங்களே உலகை ஆள்கின்றன,
என உணரும் நேரமே, நீ உயரும் நேரம் !
நாம் காணும்
காட்சிகள் அனைத்தும்
கனவின் குழந்தைகளே !
எனவே நம்பிக்கைக்
கனவுகளை காணுங்கள் !
கனவுகளை கொண்டாடுங்கள்
காண்பவை உங்கள் வசமாகும் !
இலட்சியம் ஒன்றே நம்
ஆசைகளின் திறவுகோள் !
தேவையானக் கருத்துக்களை
திணித்துக்கொள்,
தேவையில்லாதக் கருத்துக்களை
தணிக்கை செய்துகொள் !
வாழ்க்கையில் முதலீடு என்பது
சிந்தனை செய்வதும்,
செயல்படுத்துவதுமே ! ஆகும்,
சிந்தனையும்
சாதனையும்
பயணமும், பாதையும்
போல ஒன்றானது !
பிரிக்க முடியாதவை !
நீயும் மனிதன் தான்,
மற்றவர் சாதித்ததை விட
நீ அதிகமாக சாதிக்க முடியும் !
மாற்றம்……..
மற்றவரிடமிருந்தல்ல…..உன்
மனதில் இருந்தே தொடங்கட்டும் !