திருவனந்தபுரம்: கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் அது குறித்து ஆலோசிக்க அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்தை வரும் 29ம் தேதி கூட்ட கேரள அரசு முடிவெடுத்துள்ளது.
கேரளாவில் ஒரு வாரத்தில் மட்டும் 41,000 பேருக்கு கொரோனா தொற்று பரவி உள்ளது. 24 மணி நேரத்தில் மட்டும் 4,538 பேருக்கு தொற்று உறுதியாகி இருக்கிறது. 3,347 பேர் ஒரே நாளில் குணமாகினர்.
தற்போது கேரளாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்படுவோர் விகிதம் 12.59 சதவீதமாக இருக்கிறது. மொத்தம் 1,79,922 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாக, 697 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
கொரோனாவை கட்டுப்படுத்த மாநில அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. முகக்கவசமின்றி வெளியே வருபவர்களிடம் இரு மடங்கு அபராதம் விதிக்கப்படும் என்றும், திருமண நிகழ்ச்சிகளில் 50 பேரும், இறுதிச் சடங்குகளில் 20 பேரும் கலந்து கொள்ள வேண்டும் அனுமதிக்கப்பட்டு உள்ளது.
இந் நிலையில், கொரோனா பரவல் குறித்து ஆலோசனை நடத்த அனைத்து கட்சிகளின் கூட்டத்தை வரும் 29ம் தேதி கூட்ட முதலமைச்சர் பினராயி விஜயன் முடிவு செய்து இருக்கிறார்.