மும்பை : மகாராஷ்டிராவில் மேலும் 189 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டிலேயே கொரோனா தொற்று பாதிப்பு மகாராஷ்டிராவில் தான் மிக அதிகம். மருத்துவர்கள், காவலர்கள் என தொற்றுகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் 24 மணி நேரத்தில் மேலும் 189 போலீசாருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22,818 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று 4 காவலர்கள் கொரோனாவுக்கு பலியாக, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 245 ஆக இருக்கிறது. மகாராஷ்டிராவில் இதுவரை 19,385 காவலர்கள் கொரோனாவில் இருந்து குணம் பெற்று வீடு திரும்பியுள்ளனர்.
Patrikai.com official YouTube Channel