ஷார்ஜா: பஞ்சாப் அணிக்கெதிராக 224 ரன்கள் என்ற பிரமாண்ட இலக்கை விரட்டிய ராஜஸ்தான் அணி, 19.3 ஓவர்களிலேயே 6 விக்கெட்டுகளை இழந்து 226 ரன்களை எடுத்து வெற்றிபெற்றது.
அந்த அணி கடைசி நேரத்தில் எதிர்பாராமல் 2 விக்கெட்டுகளை இழந்தாலும், அதன் வெற்றியில் எந்த சிக்கலும் இருக்கவில்லை. வெற்றிக்கான அடித்தளத்தை கேப்டன் ஸ்மித் மற்றும் சஞ்சு சாம்சன் வலுவாக அமைத்துவிட, 6வது நிலையில் களமிறங்கிய ஆர்ச்சர், 3 பந்துகளில் 13 ரன்களை அடித்து, வெற்றியை கன்ஃபார்ம் செய்தார்.
பெரிய ரன்னை எடுத்தும்கூட, பஞ்சாப் அணி பவுலர்களால், ராஜஸ்தான் பேட்ஸ்மென்களை எதுவும் செய்ய முடியவில்லை.
அந்த அணியின் பவுலர் காட்ரெல், 3 ஓவர்களை மட்டுமே வீசி 52 ரன்களையும், 4 ஓவர்கள் மட்டுமே வீசி முகமது ஷமி 53 ரன்களையும் வாரி வழங்கினர். ரவி பிஷ்னாய் மட்டுமே 8.50 எகனாமிக் ரேட்டில் ரன்களை வழங்கினார்.
இந்தப் பிரமாண்ட வெற்றியின் மூலம், ராஜஸ்தான் அணி பெரிதும் கவனிக்கப்படும் அணியாக மாறியுள்ளது!