டெல்லி: வேளாண் மசோதாக்கள் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் பொய்களை கூறுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி, தீனதயாள் உபாத்யாயாவின் பிறந்தநாள் நிகழ்ச்சியில் தொண்டர்கள் மத்தியில் காணொலியில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
அனைத்து பாஜக தொண்டர்களும் விவசாயிகளை அணுகி வேளாண்மையில் புதிய சீர்திருத்தங்களின் முக்கியத்துவம் மற்றும் சிக்கல்களைப் பற்றி மிகவும் எளிமையான மொழியில் அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.
முந்தைய அரசாங்கங்கள் விவசாயிகள் அல்லது தொழிலாளர்கள் ஒரு போதும் புரிந்து கொள்ள முடியாத வாக்குறுதிகள் மற்றும் சட்டங்களை உருவாக்கின. ஆனால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் இந்த நிலைமையை மாற்ற தொடர்ந்து முயன்று விவசாயிகளின் நலனுக்காக சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுவரை, 30 சதவீத தொழிலாளர்களுக்கு மட்டுமே குறைந்தபட்ச ஊதிய உத்தரவாதம் என்ற பாதுகாப்பு இருந்தது. இப்போது, இது அமைப்புசாரா துறையில் உள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் விரிவடையும் என்று பேசினார்.