டெல்அவிவ்: இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடான பஹ்ரைன் இடையே, நேரடி வர்த்தக விமானப் போக்குவரத்து தொடங்கியுள்ளது.

கடந்த 1948ம் ஆண்டில் இஸ்ரேல் என்ற நாடு உருவான காலத்திலிருந்து, வளைகுடா முஸ்லீம் நாடுகளுக்கும், இஸ்ரேலுக்கும் ராஜ்ஜிய உறவுகள் இருந்ததில்லை. மேலும், இஸ்ரேலை அந்நாடுகள் அங்கீகரிக்கவும் இல்லை.

அதேசமயம், எகிப்து மற்றும் ஜோர்டான் நாடுகள், இஸ்ரேலுடன் அமைதி ஒப்பந்தம் செய்துகொண்டதையடுத்து, தற்போது அமீரகம் மற்றும் பஹ்ரைன் நாடுகளும் இஸ்ரேலுடன் நெருங்கியுள்ளன.

இஸ்ரேலுடன், அந்நாடுகள் சமீபத்தில் அமைதி மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட சில ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. இந்நிலையில், இஸ்ரேல் – பஹ்ரைன் நாடுகளிடையே நேரடியாக வர்த்தகரீதியிலான விமான சேவைகள் துவங்கின.

இதன்படி இஸ்ரேலின் டெல்அவிவ் நகரில் அமைந்த பென்குரியன் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம் , பஹ்ரைனின் ஐலேண்ட் கிங்டம் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.