சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரித்து, பெயர் மாற்றம் செய்யும் தமிழகஅரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ள முன்னாள் பேராசிரியர்கள், அரசுக்கு  எதிராக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு  கடிதம் எழுதியுள்ளனர்.

கடந்த வாரம் நடைபெற்ற தமிழக சட்டமன்றத்தில் மழைக்காலக்கூட்டத்தொடரில்,  சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தை நிர்வாக வசதிக்காக இரண்டாகப் பிரிக்கும் சட்ட மசோதா  நிறைவேற்றப்பட்டது. அதன்படி,  அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயர் அண்ணா தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் என்றும், புதிதாக உருவாக்கப்படும் பல்கலைக்கழகத்துக்கு அண்ணா பல்கலைக்கழகம் என்று பெயர் சூட்டப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

தமிழகஅரசின் இந்த முடிவுக்க  அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கறுப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றி வருகின்றனர். மேலும் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளனர்.

இந்ம நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றக் கூடாது என பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர்கள் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு  கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில், அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயர் மாற்றம் செய்தால், அதன்  தரம் பறிபோய்விடும் என்றும், அண்ணா பல்கலைக்கழகம் ஏற்கனவே பல  முன்னணி நிறுவனங்களுடன் செய்துள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் கேள்விகுறியாகிவிடும்.  எனவே அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றக் கூடாது என்றும்,  இதுதொடர்பாக தமிழகஅரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.