ஈரோடு:
தமிழகத்தில் தற்போது பள்ளிகளை திறப்பதற்கான சாத்தியம் இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

ஈரோட்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:
தமிழகத்தில் தற்போது பள்ளிகளை திறப்பதற்கான சாத்தியம் இல்லை. முழுமையான கல்விக்கட்டணம் வசூலித்த தனியார் பள்ளிகள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். 2.5 லட்சம் தனியார் பள்ளி மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்த நிலையில் செப்டம்பர் இறுதி வரை சேர்க்கை நடக்கும். 15 இடங்களில் தொடக்க பள்ளிகளும், 10 இடங்களில் உயர்நிலைப்பள்ளிகளும் தொடங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Patrikai.com official YouTube Channel