மேட்டூர்: கர்நாடக மாநிலத்திலுள்ள காவிரிநீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால்,
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கப்பட்டுள்ளது. நேற்று 11,241கன அடி நீர் வந்து கொண்டி ருந்த நிலையில், இன்று 12,450 கன அடியாக அதிகரித்துள்ளது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் தொடர்மழையின் காரணமாக, அங்குள்ள அணைகள் நிரம்பி வழிகின்றன. இதனால், உபரி நீர் கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறந்து விடப்பட்டு வருகிறது. தற்போது அங்கு மேலும் மழை பெய்து வருவதால், வெளியேற்றப்படும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி நேற்றைய நிலவரப்படி 11,241கன நீர் வந்துகொண்டிருந்த நிலையில், இன்று காலை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து து 12,450 கன அடியாக அதிகரித்துள்ளர்து.
மேட்டூர் அணையின் தற்போதைய நீர் மட்டம் 89.77 அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 52.38 டிஎம்சியாக உள்ளது.
அணையில் இரந்து டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு 18,000 கன அடி வீதம் வெளியேற்றப் பட்டு வருகிறது.
கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப் பட்டு வருகிறது.