
2015-ம் ஆண்டு வெளியான மலையாளப் படம் ‘சார்லி’ மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பிரமோத் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றி தயாரித்துள்ளது. மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஷிவதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பல்வேறு விளம்பர படங்களை இயக்கிய திலீப் குமார் இயக்கியுள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் குறையாத காரணத்தால், திரையரங்குகள் திறப்பது தொடர்பாக மத்திய அரசு இன்னும் எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை.
தற்போது பல படங்கள் ஓடிடி வெளியீட்டிற்காகப் பேச்சுவார்த்தையும் தொடங்கியுள்ளனர். இவற்றில் இணைந்துள்ளது ‘சார்லி’ ரீமேக்கான ‘மாறா’. அமேசான் ப்ரைம் நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
Patrikai.com official YouTube Channel