
கொரோனா அச்சுறுத்தலால் இன்னும் திரையரங்குகள் திறக்கப்படாத நிலையில் தயாராகியுள்ள பல படங்கள் ஓடிடி தளங்களில் வெளியிடப்பட்டு வருகின்றன.
அமேசான் ப்ரைம், ஹாட்ஸ்டார், ஜீ 5, நெட் ஃப்ளிக்ஸ் உள்ளிட்ட பல தளங்களும், முன்னணி நடிகர்களின் படங்களின் படங்களைப் போட்டிப் போட்டி வாங்கி வெளியிட்டு வருகின்றன.
இந்நிலையில் சன் தொலைக்காட்சியும் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியீடு, சன் டிவியிலும் ப்ரீமியர் செய்வது எனத் திட்டமிட்டுள்ளது. மேலும், சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்திற்காகவே படங்களைத் தயாரிப்பது எனவும் முடிவு செய்துள்ளது.
சன் டிவியில் ப்ரீமியர் என்ற அடிப்படையில் தமிழில் உருவாகும் ‘மாயாபஜார் 2016’ ரீமேக் படத்தைக் கைப்பற்றியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Patrikai.com official YouTube Channel