மேஷம்

கலைத்துறையைச் சேர்ந்தவங்களுக்குப் பெரிய நன்மைகள் உண்டாகும். உங்களுக்கு வேண்டியவங்க அல்லது நீங்க நம்பியிருந்தவங்க  அரசாங்க உத்யோகம் வாங்கித் தரு வாங்க. வேறு கம்பெனி மாற நினைச்சீங்க. எப்பிடி இருக்கு புது அலுவலகம்? ஆபீசும் பதவியும் முன்பைவிட  ரொம்பவும் அழகாய் மதிப்பாய் இருக்கில்ல… சந்தோஷம். பொறுப்பு ணர்ந்து செயல்படுங்க. அதிக சம்பளம் என்றால் அதிகப்பொறுப்பு அல்லவா? உங்க மனசின்மேல் கை வைச்சு சொல்லுங்க. மனசாட்சிப்படிதான் நடக்கறீங்களா? நியாயத்தை என்னிக்கும் மறக்காதீங்க. இப்போதைக்கு வெற்றி கிடைச்சாலும் பிற்பாடு திண்டாடுவீங்க. வெளிநாட்டுக்கு சென்றிருக்கும் நெருங்கிய உறவினர்கள் திரும்பி வருவாங்க. சிலருக்கு வீட்டில் குட்டிப் பாப்பாவின் குரல் கேட்க ஆரம்பிக்கும். கங்கிராட்ஸ். முன்யோசனையுடன் செயல்படறீங்க. நண்பர்களுக்காக ஒரு தொகையைச் செலவிடுவீங்க. ஆரோக்கியத்தில் சிறுசிறு அச்சுறுத்தல்கள் இருந்தாலும் டோன்ட் ஒர்ரி. பி ஹாப்பீ

சந்திராஷ்டமம் : செப்டம்பர் 21 முதல் செப்டம்பர் 19 வரை

ரிஷபம்

நிறைய ஜாலியான இன்ஸிடென்ட்ஸ் நடக்கும். முன்பு பல காரணங்களுக்காக உங்களிடமி ருந்து விலகியிருந்த ஃப்ரெண்ட்ஸும் உறவினர்களும் நட்புக் கரத்தை நீட்டியவாறு நெருங்கி வருவாங்க. புதிய வீட்டுக்கு அட்வான்ஸ் கொடுப்பீங்க. பணத்துக்காகக் கொஞ்சம் அல்லாட வேண்டியிருக்கும். டோன்ட்டே ஒர்ரி.. வெற்றிகரமான அலைச்சல்தான். அதன் பலன் சுபம்தான். ‘வீட்டைக் கட்டிப் பார்’ என்னும் பழமொழி ஓல்டுதான். ஆனால் சும்மாவா சொன்னாங்க?  சிஸ்டர்ஸ் பிரதர்ஸால் நன்மை உண்டு. வீடு … திருமணம் போன்ற விஷயங்களில் ஒருவருக்கொருவர் உதவிக்குவீங்க.  அதனால் பரஸ்பரம் அன்பும் மரியாதை யும் அதிகரிக்கும். பழைய கசப்புகள் எல்லாம் காலியாகிக் குடும்பத்தில் இனிப்பு பரவும்.  அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்கும். ஆற்றல் பளிச்சிடும். நீண்ட நாளைய விருப்பங்கள் நிறைவேறும். ஹாப்பி?

சந்திராஷ்டமம் : செப்டம்பர் 23 முதல் செப்டம்பர்  26 வரை

மிதுனம்

பொதுவாய் அவ்வளவாகப் பெரிய நன்மைகளை எதிர்பார்க்க முடியாதுதான் என்றாலும் மிக திடீரென்று ஃப்ளாஷ் அடிச்ச மாதிரி ஒரு அதிருஷ்டம் உங்களைத் தட்டிவிட்டுச் செல்லும். பயங்கரமாக இருக்கும் என்று நீங்க அஞ்சி நடுங்கிக்கொண்டிருந்த ஆரோக்யம் சும்மா சாதாரண மருந்துக்கே பயந்துகிட்டுப் புற முதுகு காட்டி ஓடிடும். கடுமையும் கடுகடுப்பும் இருந்தாலும் நல்ல கிரகங்களின் சேர்க்கை உதவவிருப்பதால் குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும் என்பதோடு பேச்சில் மென்மை கூடுவதால் மேற்சொன்ன குணங்கள் சற்று கூல் டவுன் ஆகுமுங்க. உங்க சேமிப்பு இன்கிரீஸ் ஆகும்.  கலைத்துறையைச் சேர்ந்தவங்களுக்குப் பொறுமை தேவைப்பா. கொடுத்த வாக்கைக் காப்பாற்றி மகிழ்வீங்க. இல்லத்தினர்களின் ஒத்துழைப்போடு இனிய பணிகளைச் செய்து முடிப்பீங்க. ஹப்பாடா. குட் லக்.

கடகம்

ஆரோக்யம் சம்பந்தமான பிரச்சினைகளை ஏதோ பெரிய விஷயம்னு நினைச்சுக்கிட்டு டென்ஷனாகாதீங்க. பெரிய அளவில் வர வேண்டியது இதோடு போயிருக்கு என்று உங்களுக்கே தெரியும். கரணம் தப்பியிருந்தால் என்னாகியிருக்கும்? அடேயப்பா. வாழ்க்கை யில் மனசு வந்து இந்த அளவு செலவு செய்திருப்பீங்களா நீங்க. பரவாயில்லை. நீங்க முழுமனசோட கார்டைத் தேய்க்கத் தேய்க்க, செல்வத்துக்கு அதிபதியான மகாலட்சுமி கஜானாவை நிரப்பிடுவா. அந்தக் கவலையே வேணாம் உங்களுக்கு. நல்ல விஷயத் துக்குத்தான் செலவு செய்யறீங்க, பலகாலமாய்த் துலக்காத விளக்கைப் பொன் புடம் போட்ட மாதிரி இப்போதான் மனசில்  நல்ல விஷயங்கள் துளிர்விட ஆரம்பிச்சிருக்கு. கீப் இட் அப். வார்த்தைகளில் மட்டும் அதீத கவனம் தேவை என்பதை நினைவில் வெச்சுக்குங்க.  உயர் அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீங்க. கங்கிராஜுலேஷன்ஸ்.

சிம்மம்

புதுப்புது விஷயங்களைக் கத்துக்குவீங்க. கலைத்துறையில் உள்ளவங்களுக்கு ஜாக்பாட் அடிச்ச மாதிரிப் புதிய அக்ரீமென்ட்ஸ் கையெழுத்தாகும். இந்த வருடம் வேற ஆபீஸ்/ வேற ஸ்கூல்/ புதிய காலேஜ் சேரப்போறீங்க. கங்கிராட்ஸ். கல்யாணம் கச்சேரின்னு மஜாவாய்ப் பொழுது போகும்.  எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். பேச்சினால் யாரையும் எனிமி ஆக்கிக்காதீங்க. காதல் துவங்க வாய்ப்புண்டு. மனசில் மார்கழி! வயிற்றில் பிறந்த குழந்தைங்களுக்கு நல்ல விஷயங்கள் நடக்கும். பகைவர்களாய் இத்தனை காலம் முறைச்சுக்கிட்டு இருந்த ரிலேடிவ்ஸ் நட்புணர்வுடன் உங்களை நெருங்கி தங்கள் செயல்களுக்கு ஸாரியெல்லாம் சொல்லுவாங்க. மன்னிச்சுடுங்க. பாவம். பெரியளவில் ஆதாயத்தை எதிர்பார்த்து செய்த காரியமொன்றில் குறைந்த அளவே ஆதாயம் கிடைக்கும். இட்ஸ் ஓகே.  யூ வில் பிகம் ஆல்ரைட்.

கன்னி

குழந்தைங்க பற்றிக் கடந்த ஒரு வருஷமா இருந்து வந்த டென்ஷன்ஸ் போயே போச்சு. லாபம் .. வரவு பற்றி முன்பு போல் இல்லாமல் பொறுமையாய் டீல் செய்யறீங்களே. ஸோ பிரச்னை எதுவுமே வராது. திடீர் லாபங்களும் அரசாங்கம் மூலம் நன்மைகளும் வரும். எதுவுமே சற்று நிதானமாகத்தான் நடக்கும். அவசரம் வேண்டாம். கவலையும் வேண்டாம். டாடிக்கு கலை சம்பந்தமான நன்மைகள் உண்டு. பேச்சில் திடீர்க் கோபதாபங்களால் ஆத்திரமும் வராமல் பார்த்துக்குங்க. எதையும் சற்று யோசிச்சுப் பேசுங்க. உத்யோகத்தைக் காப்பாத்திக்கப் பாருங்க. நல்லவேளையாய் மிகவும் புத்திசாலித்தனமாய் செயல்படுவதால் அதிக பிரச்சினைகள் உங்களை அண்டாது. குடியிருக்கும் வீட்டால் முன்பு ஏற்பட்டிருந்த பிரச்னை அகலும். ஆர் யூ ஹாப்பி?

துலாம்

உஷ்ண சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படக்கூடும்தான். இட்ஸ் ஓகேங்க.   அநாயாசமாய்ச் சமாளிச்சு வெளியே வந்துடுவீங்க. டோன்ட் ஒர்ரி.  சிம்ப்பிள். வருமுன் காப்பது சிறந்தது என்பதை எப்பவும் நினைவில் வெச்சுக்குங்க. குடும்பதிலும்  ஆபீசிலும் எதிர்பாலினத்தினரின் உதவியும் ஆதரவும் கிடைக்கும். குறிப்பாகக் கணவன் மனைவிக்குள் சமீபத்தில் காணாமல் போயிருந்த ஒற்றுமையும் நட்புணர்வும் மீளும். தந்தையின் ஹெல்த்தும் அவருக்கும் உங்களுக்கும் இடையே உள்ள நல்லுறவையும் பாதுகாக்க வேண்டியது அவசியம். திருமணத் திற்கு  டேட் குறிச்சுட்டாங்களா?  ஹாப்பிதானே?  பதற்றமும் டென்ஷனும் இல்லாம சுபகாரியங்களை எதிர்கொள்ளுங்க. தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். அரை குறையாக நின்ற பணிகளை விரைந்து செய்து முடிப்பீங்க. தட்ஸ் குட்.

விருச்சிகம்

பரவாயில்லையே. வெரி குட் முன்னேற்றம்.  முன்பைவிட அடக்கி வாசிக்கறதால உங்க மேல்  மத்தவங்க  வைச்சிருக்கும் மதிப்பு மேலும் மேலும் கூடும். பழைய பழிகளை எரேசர் வைச்சு அழிச்சுக்கிட்டே வர்றீங்க. நல்லது.. நல்லது! சற்று விரக்தியான சிந்தனைகளும் மன ஓட்டங்களும் தலைகாட்ட முயன்றாலும்கூட அவையனைத்தும் ஆன்மிக சிந்தனைகளாக மாறி உங்களுக்கு நன்மைகளையே ஏற்படுத்திக் கொடுக்கும். நன்மைகளை நாலுபேருக்கு எடுத்துச் சொல்வீங்க. பிரிந்த நண்பர்களை.. பிரிந்த குடும்பங்களை ஒன்று  சேர்க்கப்பாடு படுவீங்க.  மற்றவர்களுக்கு மருத்துவம் சம்பந்தமான உதவிகள் செய்வதோடு ஆன்மிக வழிகாட்டல் போன்ற உதவிகளும் செய்வதால் மனசில் அமைதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். மற்றவர்களுக்கும் உங்க மீது மரியாதை  அதிகரிக்கும். சுணங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும். வாவ். குட் லக்.

தனுசு

ஸ்கேல் வெச்சு அளந்து பேசுங்க. ப்ளீஸ். ப்ளீஸ். குறிப்பா அலுவலகத்தில் சென்டிமீட்டருக்கு மேல் வாயைத் திறக்காதீங்க. அதுவும் காபி குடிக்க மட்டுமே இருக்கட்டுங்க. காதலர்/ காதலி உயர் நிலை அடைவார். காதல் பலித்து உடனே மோதிரம் மாற்றப்போறீங்க. அதாங்க எங்கேஜ்மென்ட் எனப்படும் நிச்சயதார்த்ததைச் சொன்னேன். உங்களின் கவர்ச்சி அம்சம் இன்கிரீஸ் ஆகும்.  சுற்றி உள்ளவங்க உங்க பேச்சுக்கு மதிப்புக்கொடுத்துச் செவிசாய்க்க ஆரம்பிப்பாங்க.  தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொட்டதெல்லாம் சக்ஸஸ்.  எனினும் குருட்டு அதிஷ்டமெல்லாம் இல்லீங்க. கடுமையான உழைப்புக்கு உங்களுக்குக் கிடைக்கும் பரிசு அது. அதிலும் சற்றுத் தாமதமாய்க் கிடைச்சிருக்குங்க. என்ஜாய். பழகிய சிலருக்காக கணிசமாக செலவிடும் சூழ்நிலை உருவாகும். மாற்று மருத்துவம் உடல்நலத்தை சீராக்கும். தாங்க் காட்.

மகரம்

தேவையில்லாத கோபம், படபடப்பு சந்தேகம் எல்லாம் வேண்டாம். இயல்பா இருங்க. அமைதியா இருந்தா ஆரோக்யம் பிழைக்கும். அப்பாவுக்கும் உங்களுக்கு இருந்துக்கிட்டிருந்த சின்னச்சின்ன உரசல்கள் சரியாகி ஸாரி டாடி ரேஞ்சுக்கு இறங்கி வந்திருப்பீங்க. அலுவலக டென்ஷன்ஸ் எல்லாமே படிப்படியா சரியாகும். ஃப்ரெண்ட்ஸ் நல்ல விதமாய் அமைஞ்சிருக் காங்க. லக் தான். கற்பனை சார்ந்த துறைகளில் உள்ளவங்க புது சாதனைகள் புரிந்து நாலு பேரைத் திரும்பிப் பார்க்கச் செய்வீங்க. பரம்பரை வீடு நகை எல்லாம் தேடி வரும். வர வேண்டிய தொகைகள் அப்படி இப்படி ஆட்டம் காட்டும். இட்ஸ் ஓகே. பிறகு கிடைக்கும்.  கண்டுக்காம விடுங்க. திட்டமிட்ட காரியம் திசை மாறிச்செல்லலாம். வாங்கல் கொடுக்கல் களில் கூடுதல் கவனம் தேவை. பீ கேர்ஃபுல்.

கும்பம்

முக்கியமான பொருட்களை அந்தந்த இடத்தில் ஜாக்கிரதையா வைக்கக் கத்துக்குங்க. எஸ்பெஷலி ஆபீசில் மறதிக்கு இடம் கொடுக்காதீங்க. அதன் காரணமாய் எந்தச் சிக்கலிலும் மாட்டிக்காதீங்க. கவனம் தேவை. ப்ளீஸ்.  யாரோடும் வாக்குவாதம் வேண்டாம். வேண்டாம்  வேண்டவே வேண்டாம். நீண்ட பயணம் ஒன்று உண்டு. உங்க கணவருக்கு/ மனைவிக்கு எதிர்பாராத தொகை ஒன்று கிடைக்கும். குழந்தைகளுக்குக் கல்யாணம், குழந்தைப்பேறு என்று சுப நிகழ்ச்சிகள் நடக்கும். ஒரு வேளை  அவங்க மாணவர்கள் என்றால் படிப்பில் சாதனை செய்து மனதைக் குளிர்விப்பாங்க. சிலருக்கு வீட்டில் புதிய பெரிய குரல் கொஞ்சும்! டாடிக்கும் உங்களுக்கும் யுத்தம் வராமல் பார்த்துக்குங்க. அப்பிடி வந்தாலும் சரண்டர் ஆயிடுங்க. பிகாஸ்… அவர் பக்கம் நியாயம் இருக்கு. உங்க குழந்தைகளை டென்ஷன் பண்ணாம இருங்க. போதும். பெரியவங்க மனசை சந்தோஷப்படுத்தி ஆசீர்வாதம் வாங்கி னால் இன்னும் பெட்டர்.  வாழ்க்கைத் துணையின் உத்தியோகம் சம்மந்தமாக எடுத்த முயற்சி பலன் தரும். வெரி குட்.

சந்திராஷ்டமம் : செப்டம்பர் 17 முதல் செப்டம்பர் 19 வரை

மீனம்

மனதில் நல்லெண்ணங்கள் மேலோங்கி அவற்றை மத்தவங்களுக்குப் பரப்பவும் செய்வீங்க. உங்களைச் சிலர் விமர்சனம் செய்தாலும் பரவாயில்லைங்க.நீங்கதான் டோன்ட் கேர் மாஸ்டராச்சே..  நல்ல செயல்களை நிறுத்தாதீங்க. உங்கள் கோபதாபங்கள் காரணமாய்க்     குடும்பத்தினருடன் சிறு பிராப்ளம்ஸ் ஏற்படலாம்.  குட்டி குட்டியாய் சண்டை சச்சரவுகள் ஏற்படும் என்றாலும் உங்க பெருந்தன்மையும் நல்ல செய்கைகளும் எல்லா மனத்தாபங் களையும் சரிக்கட்டிவிடும்.  வீண்பழி ஏற்படாமல் கவனமாய் இருந்துக்குங்க. முரட்டுத்தனம் ஈகோ போன்ற வேண்டாத விஷயங்கள் உங்களைப் பிடித்தாட்ட வாய்ப்புள்ளது. சற்று பணிவும் மென்மையும் இருந்தால் பெட்டர்தானே? குடும்ப உறுப்பினர்கள் உங்கள் கருத்துகளை ஏற்றுக் கொள்ள முன்வருவர். வெளிவட்டார பழக்கவழக்கம் விரிவடையும். என்ஜாய்.

சந்திராஷ்டமம் : செப்டம்பர் 19 முதல் செப்டம்பர் 21 வரை