ஜெனிவா: கொரோனா வைரசின் 2வது அலை நிச்சயம், தடுக்க முடியாது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனை உலகின் தலை சிறந்த மருத்துவரும், உலக சுகாதார அமைப்பின் பொது நிர்வாக இயக்குனருமான டேவிட் நபாரோ கூறி உள்ளார். லண்டனில் வெளியுறவு செயலர்களின் கூட்டத்தில் தான் சமர்ப்பித்த அறிக்கையில் அவர் இதை கூறி உள்ளார்.
அவர் அதில் மேலும் தெரிவித்து இருப்பதாவது: கொரோனா கவலையின்றி பல நாடுகள் உள்ளன. இது மிகப்பெரிய ஆபத்து. இதுவரை கொரோனா தாக்குதல் என்பது வெறும் துவக்க நிலையே. எனவே கொரோனாவின் 2வது அலை நிச்சயம். அதை தடுக்க முடியாது, மிகவும் அபாயகரமானதாக இருக்கும்.
குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் பெரும் இழப்புகள் ஏற்படும். 2வது அலை வந்த பின்னர், உலகின் ஒட்டுமொத்த பொருளாதாரமும் மோசமான நிலைக்கு சென்றுவிடும். ஏழைகள் வாழ்வாதாரம் இழந்து கடும் பாதிப்புகளை சந்திப்பர் என்று அறிக்கையில் தெரிவித்துள்ளார்.