டெல்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்திற்கு மத்தியஅரசு வழங்கிய நிதி போதுமான தாக இல்லை, கூடுதல் நிதி வழங்க வேண்டும் என மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. தம்பிதுரை கோரிக்கை வைத்தார்.
கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையில், பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 14ந்தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடைபெற்று வருகிறது.
மாநிலங்களவையில் இன்று நடைபெற்ற கொரோனா தொற்று தொடர்பான விவாதத்தின்போது கலந்துகொண்டு பேசிய அதிமுக எம்பி தம்பிதுரை, கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு மத்திய அரசு தமிழகத்திற்கு இதுவரை வழங்கியுள்ள நிதி போதுமானதாக இல்லை என்றும், தமிழகத்திற்கு சிறப்பு நிதியாக ரூ.9000 கோடி வரை தேவைப்படுகிறது.
கொரோனா தொற்றால் பல சோதனைகள் ஏற்பட்டுள்ள நிலையில் தமிழகத்துக்கு மத்திய அரசு தேவையான நிதியை மத்திய அரசு உடனடியாக ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.