டெல்லி: கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையில் பாராளுமன்றம் இன்று கூடியது. முதல் கூட்டத்தில், முன்னாள் குடியரசு தலைவ்ர பிரணாப்முகர்ஜி, தமிழக எம்.பி., வசந்தகுமார் உள்பட மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாராளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
5 மாதங்களுக்கு பிறகு இன்று  பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கி உள்ளது. இன்று முதல்  அக்டோபர் 1-ந் தேதி வரை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
மொத்தம் 18 நாட்கள் கூட்டம் நடைபெறும். இந்த கூட்டத்தில் நிதி தொடர்பான 2 விவகாரங்கள் உள்பட 47 மசோதாக்களை விவாதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கொரோனா பிரச்சினை, லடாக் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை கிளப்பி மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
இந்த நிலையில், இன்று காலை கூட்டம் தொடங்கியதும,  முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, புகழ்பெற்ற இந்திய பாரம்பரிய பாடகர் பண்டிட் ஜஸ்ராஜ், முன்னாள் சத்தீஸ்கர் முதல்வர் அஜித் ஜோகி, எம்.பி. கவர்னர் லால்ஜி டாண்டன், உ.பி. அமைச்சர்கள் கமல் ராணி மற்றும் சேதன் சவுகான் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ராகுவன்ஷ் பிரசாத் சிங் மற்றும் பிறருக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, பாராளுமன்றம் 1மணி நேரம் ஒத்தி வைக்கப்பட்டது.
பின்னர் மீண்டும் தொடங்கியது. பரபரப்பான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.