சென்னை: தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இன்று புதிதாக 5,693 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,02,759 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று ஒரே நாளில் 994 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,48,585 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று மட்டுமே 1228  பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை மீண்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை 1,35,215 ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலையில், , 10,393 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் 17 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால், இதுவரை 2,976 பேர் சென்னையில் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

இவ்வாறு தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

[youtube-feed feed=1]