சென்னை: தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நாளை கூடவுள்ள நிலையில், சபாநாயகர் முதல், சட்டமன்ற கூட்டத்தில் பங்கேற்கும் அனைவருக்கும் கொரோனா சோதனை நடத்தப்பட்டது. இதில், அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேருக்கு தொறறு உறுதியாகி உள்ளது. இதையடுத்து, அவர்கள் சட்டமன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்க தடை செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர்ந்து, கொரோனா பரவல் காரணமாக, சென்னை கலைவாணர் அங்கில் நாளை கூடுகிறது. 3 நாட்கள் மட்டுமே நடைபெற உள்ள சட்டமன்ற தொடரில் பங்கேற்கும் அனைவருக்கும் கொரோனா சோதனை நடத்த சபாநாயகர் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி முதல்வர் உள்பட அனைவருக்கும் சோதனை நடத்தப்பட்டது. இதில், சபாநாயகர் தனபால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் , திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசுஅதிகாரிகள், தலைமைச் செயலக ஊழியர்கள், சட்டசபை ஊழியர்கள், பாதுகாப்பு அதிகாரிகள், போலீசார், பத்திரிகை யாளர்கள் என உள்பட பலருக்கு பாதிப்பு இல்லை என தெரிய வந்தது .
அதே நேரத்தில், 3அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. எஸ்.பி. சண்முக நாதன், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பொன். சரஸ்வதி, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தூசி கே.மோகன் ஆகியோருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானது. 3 பேரும் சென்னை யில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
மேலும், முதல்-அமைச்சரின் அலுவலக ஊழியர் ஒருவருக்கும், சட்டசபை செயலக ஊழியர் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.