டெல்லி: கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் நாடு முழுவதும் மருத்துவப்படிப்புகளுக்கான தேசிய நுழைவுத்தேர்வா நீட் தேர்வு அறிவித்தபடி இன்று நடைபெறுகிறது.
முகக்கவசம் கட்டாயம், முழுக்கைச்சட்டை கொண்ட ஆடைகளை அணியக்கூடாது. ஷூக்கள் அணியக்கூடாது. ஸ்லிப்பர், சாண்டல்ஸ் போன்ற உயரம் குறைந்த செருப்பு வகைகள் அணியலாம் என பல்வேறு கட்டுப்பாடு கள் விதிக்கப்பட்டுள்ளன.
எம்.பி.பி.எஸ்., பி.டி. எஸ். ஆகிய மருத்துவ படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான ‘நீட்’ எனப்படும் தேசிய தகுதி நுழைவுத் தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. கொரோனா தொற்று காரணமாக, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், தள்ளி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டும், மத்தியஅரசு விடாப்பிடியாக தேர்வை நடத்துகிறது.
இதற்கிடையில், நீட் தேர்வு பயம் காரணமாக, தமிழகத்தில் அடுத்தடுத்து 3 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இந்த சம்பவம் தமிழக மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், இன்று பிற்பகல் தமிழகம் உள்பட நாடு முழுவதும் தேர்வு நடைபெற உள்ளது.
தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை கொரோனா தொற்றினால் பின்பற்றப்படும் சமூக விலகல் விதிகள் காரணமாக 24-இல் இருந்து 12-ஆக குறைக்கப்பட்டுள்ளது.
அனுமதிச் சீட்டில், கொரோனா நடைமுறைகளைப் பற்றி குறிக்கப்பட்டிருக்கும். தேர்வு அறைக்குள் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டிருக்கும் பொருட்கள் குறித்து அனுமதிச்சீட்டில் கொடுக்கப்பட்டு உள்ளது.
மேலும் கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்காக 11 மணி முதல் 11.30 மணிவரை, மாறுபட்ட ஸ்லாட் நேரப்படி மாணவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
தேர்வு மையத்துக்குள் மின்னணு கருவிகள், புத்தகங்கள் உட்பட வேறு எந்த பொருளும் அனுமதிக்கப்படாது.
ஹால் டிக்கெட், அடையாள அட்டை போன்றவற்றை மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும்.
முழுக்கைச்சட்டை கொண்ட ஆடைகளை அணியக்கூடாது.ஷூக்கள் அணியக்கூடாது. ஸ்லிப்பர், சாண்டல்ஸ் போன்ற உயரம் குறைந்த செருப்பு வகைகள் அணியலாம் என பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
முக கவசம் கட்டாயம் என்பதை, சில மாணவர்கள் தவறாக பயன்படுத்தி, தேர்வில் முறைகேட்டில் ஈடுபடாமல் தடுக்க, தேர்வு மையங்களில் முக கவசம் வழங்கவும், தேர்வு மைய அலுவலர்களுக்கு, தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தியுள்ளது.