சென்னை: தமிழகத்தில்  இன்று ஒரே நாளில் 5528 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறு செய்யப்பட்டுள்ளது. இதனால்,  கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4,86,052 ஆக உயர்ந்துள்ளது.

தற்போதைய நிலையில், தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 48,482 ஆக உள்ளது.

இன்று ஒரே நாளில், தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து 85,473  பேர் வீடு திரும்பியுள்ள நிலையில்,  இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 4,29,416 ஆக அதிகரித்துள்ளது. இது 88.35% என சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

இன்று ஒரே நாளில் 64 பேர் உயிரிழந்துள்ள நிலையில்,  இதுவரை தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 8,154 ஆக உயர்ந்துள்ளது.

இன்று மட்டும் தமிழகம்முழுவதும்  85,47 பேருக்கு சோதனை நடத்தப்பட்டுள்ள நிலையில், இதுவரை 56,30,323 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]