சென்னை: தமிழகத்தில், பிரதான் மந்திரி கிசான் திட்டத்தில் கோடிக்கணக்கான ரூபாய் முறை கேடு நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ள நிலையில், விவசாயிகளின் வங்கிக்கணக்குள் முடக்கப்பட்டன.
இந்த நிலையில், முடக்கப்பட்ட வங்கி கணக்கில் இருந்து பணத்தை திரும்ப பெற புதிய வழிமுறை கடலூர் மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
கிஸான் விகாஸ் திட்டத்தல் கடலூர் மாவட்டத்தில் அதிக அளவிலானமுறைகேடுகள் நடைபெற்று இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இது தொடர்பாக சுமார் 37 ஆயிரம் பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு உள்ளது. போலி பயனாளிகளின் வங்கிக் கணக்கிலிருந்து 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்ட உள்ளது.
இந்த நிலையில், உண்மையான விவசாயிகள் பிரதமர் கிசான் திட்டம் பணத்தை திரும்ப பெற புதிய வழிமுறை கடலூர் மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
அதன்படி, முடக்கப்பட்ட வங்கி கணக்கிலிருந்து மாவட்ட ஆட்சியர் கணக்கிற்கு பணம் வரும்படி மாற்றியமைக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் விவசாயிகள் பணத்தை திரும்ப பெற முடியும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.