டெல்லி: நீட் தேர்வை ஒத்தி வைக்க கோரி தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
நாடு முழுவதும் வரும் 13ந்தேதி நீட் தேர்வு நடைபெற உள்ளது. கொரோனா, பரவல் காரணமாக, நீட் தேர்வை நடத்த பல மாநிலங்களில் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஆனால், தேர்வை நடத்திய தீர வேண்டும் என மத்தியஅரசும், உச்சநீதி மன்றம் பிடிவாதமாக கூறி வருகிறது.

இந்த நிலையில், கொரோனா நோய்த்தொற்று குறையாததால் நீட் தேர்வை ஒத்திவைக்கக் கேட்டு கேசவ் மகேஸ்வரி என்பவர் உள்பட சிலர் உச்சநீதிமன்றத்தில் மீண்டும், வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த புதிய மனுக்கள் இன்று (புதன்கிழமை) நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமர்வில் காணொலி அமர்வில் விசாரிக்கப்பட உள்ளது.
Patrikai.com official YouTube Channel