ஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வருகிறது. அமெரிக்கா, இந்தியா, பிரேசில் உள்பட சில நாடுகளில் தொற்று பரவல் உச்சமடைந்துள்ளது.உலக அளவில் கொரோனா பாதிப்பு 2.75 கோடியை நெருங்கி உள்ளது. உயிரிழப்பும் 9 லட்சத்தை எட்டி வருகிறது.
இன்று(8ந்தேதி) காலை நலவரப்படி உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளோர் எண்ணிக்கை 2,74,82,975 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பும், 8,96,558 ஆக உயர்ந்து உள்ளது.
தற்போதைய நிலையில், தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளோர் எண்ணிக்கை 1,95,77,928 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை கொரோனா தொற்று நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,96,588 ஆக அதிகரித்து உள்ளது.
உலகிலேயே கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்தில் இருந்து வருகிறது. அங்கு தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,485,575 ஆகவும், பலியானோர் எண்ணிக்கை 193,534 ஆக உள்ளது. இதுவரை 3,758,629 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போதைய நிலையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,541,030 ஆக உள்ளது.
2வது இடத்தில் இந்தியா உள்ளது. இங்கு இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,277,584 உள்ளது. இதுவரை 72,816 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை 3,321,420 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 883,348 ஆக உள்ளது.
3வது இடத்தில் தொடர்ந்து பிரேசில் நாடு இருந்து வருகிறது. அங்கு கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4,147,794 ஆகவும், இதுவரை
127,001 பேர் உயிரிழந்தும் உள்ளனர். தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 3,355,564 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போதைய நிலையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 665,229 ஆக உள்ளது.