மும்பை: நீங்கள் மகாராஷ்டிரா காரரே அல்ல! என்று மகாராஷ்டிரா மாநில சிவசேனை எம்.பி.யை நடிகை கங்கனா ரனாத் கடுமையாக சாடியுள்ளார்.
பிரபல நடிகை கங்கனா ரனாத், சமீபத்தில், பாலிவுட் திரையுலகில் நடைபெறும் போதை பழக்கம் தொடர்பாக கருத்து தெரிவித்திருந்தார். அவர் பதிவிட்ட டிவிட்டில், மும்பை மாநகரம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல இருப்பதாக டிவிட் பதிவிட்டிருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
கங்கனா ரனாத் கருத்துக்கு கண்டனம் தெரிவித்த சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், கங்கனா மன்னிப்பு கோர வேண்டும் என்றும், அச்சமாக இருந்தால் மும்பை மாநகரத்திற்கு வரவேண்டாம் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், சஞ்சய் ராவுத்துக்கு பதில் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ள ரனாத், உங்களுக்கு மிரட்டலுக்கு பயப்பட மாட்டேன். சிவசேனா தொண்டர்கள் என்ன மிரட்டல் விடுத்தாலும், வரும் 9 ஆம் தேதி மும்பைக்கு நிச்சயம் வரப் போவதாகவும் முடிந்தால் தடுத்து பாருங்கள்.
“சஞ்சய்-ஜி நான் உங்களைக் கண்டிக்கிறேன், நீங்கள் மகாராஷ்டிரா மாநிலத்தவரே அல்ல,” என்றும், நீங்கள் (சஞ்சய் ரவுத்) பெண்களுக்கு எதிரான குற்றங்களைச் செய்யும் மக்களுக்கு அதிகாரம் அளித்துள்ளீர்கள். இந்த நாட்டின் மகள்கள் உங்களை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், மும்பையில் வசிக்க பயப்படுவதாக முன்பு கூறிய அமீர்கான் அல்லது நசீருதீன் ஷா போன்ற நடிகர்கள் அல்ல, ஏன் அவதூறான கருத்து தன்னை நோக்கி மட்டுமே செலுத்தப்பட்டது என்று கேள்வி எழுப்பிய கங்கனா, உங்களது மனநிலை பெண்களுக்கு எதிரானது என்றும், உங்களிடம் நான் மன்னிப்பு கோரப்போவதும் இல்லை என்று கூறியுள்ளார்.
தற்போது கங்கனாரனாவத் இமாச்சல பிரதேசத்தில் உள்ள தனது சொந்த ஊரில் தங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது