கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் கடந்த 5 மாதங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளதால், செப்டம்பர் 1ஆம் தேதி முதல் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப் பட்டதால் தமிழகம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.
இதற்கிடையில், ஏற்கனவே 15 மாவட்டத்திற்கு மேலாக கொரோனா தடுப்பு மற்றும் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு நடத்திய முதல்வர் இன்று திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு செய்கிறார். அங்கு மாவட்ட வளர்ச்சி மற்றும் கொரோனா தடுப்புப் பணி பற்றி முதல்வர் பழனிசாமி இன்று ஆய்வு செய்கிறார்.
இன்று மாலை 3 மணிக்கு நடக்கும் ஆய்வுக்கூடத்திற்கு 7 ஆயிரத்து 528 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் பழனிசாமி வழங்குகிறார். முதல்வர் பழனிசாமி ஏற்கனவே முடித்து வைக்கப்பட்டுள்ள 21 பணிகளை தொடங்கி வைத்தும், 12 புதிய திட்ட பணிகளுக்கு அடிக்கலும் நாட்டுகிறார்.